வருது நிவர் புயல்… 8 மாவட்டங்களில் புரட்டியெடுக்கப் போகும் கனமழை : கொஞ்சம் உஷாரா இருங்க..!!

24 November 2020, 1:58 pm
Quick Share

சென்னை : நிவர் புயல் எச்சரிக்கையின் காரணமாக 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேசியதாவது :- நாளை மாலை நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும். இந்த சமயத்தில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். கடற்கரை பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் இருக்கும். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 27ம் தேதி வரை கனமழை பெய்யும். குறிப்பாக, நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது, என தெரிவித்தார்.

Views: - 0

0

0