அமைச்சர் to ஆளுநர்.. தாவர்சந்த்‌ கெலாட்டால் மாறும் மத்திய அமைச்சரவை.. எதிர்பார்ப்பில் மூத்த தலைவர்கள்…!!

6 July 2021, 6:12 pm
central government - updatenews360
Quick Share

கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டார். அதன்படி, கர்நாடக ஆளுநராக தாவர்சந்த்‌ கெலாட்டும்‌, மிசோரம்‌ மாநில ஆளுநராக ஹரிபாபு கம்மபதியும், மத்தியப்பிரதேச மாநில ஆளுநராக மங்குபாய்‌ படேலும், ராஜேந்திர விஸ்வநாத்‌ அர்லேகர்‌ இமாச்சல்‌ பிரதேச மாநில ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்‌ மிசோரம்‌ மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ஸ்ரீதரன்பிள்ளை கோவா ஆளுநராகவும்‌, ஹரியாணா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த சத்யதேவ்‌ நாராயண்‌ ஆர்யா திரிபுரா ஆளுநராகவும்‌, திரிபுரா மாநில ஆளுநராக பணியாற்றி வந்த ரமேஷ்‌
பைஸ்‌ ஜார்க்கண்ட்‌ மாநில ஆளுநராகவும்‌, இமாச்சல்‌ மாநில ஆளுநராக பணியாற்றி வந்த பண்டாரு தத்தாத்ரேயா ஹரியாணா மாநில்‌ ஆளுநராகவும்‌
நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதால் மத்திய அமைச்சரவையிவ் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

இது தொடர்பாக ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டனர். ஒருவேளை மத்திய அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டால், பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு செய்யப்படும் முதல் விரிவாக்கம் இதுவாகும்.

Views: - 128

0

0