மின்னலால் பறிபோன பார்வை; 9 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்: அலறித் துடித்த மாணவி…!!

Author: Sudha
11 ஆகஸ்ட் 2024, 3:27 மணி
Quick Share

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

பேருந்து நிலையம் முதல் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் நிரம்பி காணப்பட்டது விழுப்புரத்தை அடுத்துள்ள கக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் இவருடைய மகள் சன்மதி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று பெய்த கன மழை காரணமாக இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது இதன் விளைவாக இவர்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சாதன பொருட்களும் அதிக மின்னோட்டம் காரணமாக வெடித்துச் சிதறியது.இதனால் ஏற்பட்ட அதிக வெளிச்சம் காரணமாக சிறுமியின் கண்பார்வை பறிபோனதாக சொல்லப்படுகிறது

மின்னல் தாக்கிய சிறிது நேரத்தில் சிறுமியின் கண் பார்வை மங்கலாகவே அவர் கதறி அழுதுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியின் பார்வை முழுவதும் பறிபோனது.உறவினர்கள் சிறுமியை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு கண் பார்வையை திரும்ப கொண்டு வர முடியுமா என மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

மின்னல் தாக்கி சிறுமி ஒருவர் கண் பார்வை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

  • Su venkatesan மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!
  • Views: - 652

    0

    0