தமிழக அமைச்சரவையில் மாற்றமா? உதயநிதிக்கு அமைச்சர் பதவி? திமுக அமைச்சர்களின் திடீர் கோரிக்கை!

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் முன்னிட்டு அத்தொகுதி சார்பாக மாபெரும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதியின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதிலும் பெரிய அளவில் அமர்க்களம் ஆரவாரம் ஏதும் இல்லாமல் ஏழை மக்கள் பயன்படுகிற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடுவது நடந்தால் நல்லது, அனைவரும் மிக மகிழ்ச்சி அடைவோம். அமைச்சராகவதற்கான எல்லா தகுதிகளையும் உடையவர் உதயநிதி எனவும் கூறினார்.

திமுக இளைஞர் அணி அமைப்பு என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடித்தளம். ஏறத்தாழ 30 லட்சம் இளைஞர்கள் இந்த அணியில் உள்ளடங்கி இருக்கிறார்கள். திமுக இளைஞரணி சம்பிரதாயத்திற்கான அமைப்பு அல்ல எனவும் சமூகத்திற்கான அமைப்பு எனவும் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

10 லட்சம் இளைஞர்களை உள்ளடக்கி இருக்கிற உயிரோட்டமான அமைப்பு இது, நல்ல தலைவராக உதயநிதி இருப்பதால் அவர் எல்லா தகுதிகளுக்கும் ஏற்புடையவர் என கூறினார்.

இதே போல, உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,” இளைஞரணி நிகழ்ச்சி என்றாலே அதில் ஒரு எழுச்சி என்றும் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது என்றாலும் இந்த நிகழ்ச்சி நடப்பதை கேட்டு உதயநிதி நெகிழ்ந்தார். திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு இளைஞரணி தான். இன்றைய இளைஞரணி செயலாளர் நாளை கழக(திமுக) தலைவராக வருவதற்கு தட்டியம் (அடிதளம்) போடுகின்ற நிகழ்வாக தான் இன்று தமிழ்நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

சின்னவருக்கு வெடி வைத்தால் புடிக்காது..எனக்கு சிறியதாக உதவிகள் செய்தாலும் மக்களுக்கு பயன்படுகிற வகையில் செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார் உதயநிதி.

இளைஞரணி செயலாளராக எளிதில் உதயநிதி வரவில்லை.. 2019 தேர்தல் வெற்றிக்கு என்னை விட தொண்டர்களும் தலைவரும் தான் காரணம் என பெருமிதத்துடன் கூறியவர் நமது சின்னவர். அவர் இன்னும் மேலும் பல உயரங்களை தொட வேண்டும்.

இந்த பிறந்தநாளில் அவர் சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். அடுத்த பிறந்தநாளில் அவர் அமைச்சராக இருக்க வேண்டும் என அனைவரின் ஒத்த கருத்தாக அவரை வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இரத்ததான முகாம்,அன்னதானம் நலத்திட்ட உதவிகள் என எதுவாக இருந்தாலும் மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்ற உதயநிதியின் அன்பு கட்டளையை ஏற்று தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.