தாலி கட்டிய சில நிமிடங்களில் மணமேடையில் சரிந்து விழுந்த மணமகன் : துக்க வீடாக மாறிய சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 9:17 pm
Mrg Husband dead - Updatenews360
Quick Share

சமீப காலங்களாகவே இளைஞர்கள் திடீர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலியாகும் சம்பங்களை நாம் பார்த்திருக்கிறோம். எந்தவொரு உடல்நிலை பாதிப்பு இல்லாதவர்களுக்கும் இதுபோல நடப்பது அதிர்ச்சி தருவதாகவே இருக்கிறது.

சீதாமர்ஹியில் உள்ள மணிந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார்.. 22 வயதே ஆன இவருக்குப் புதன்கிழமை அருகே இருக்கும் இந்தர்வா கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

அங்கு அப்போது அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மணமகனைத் தவிர.. அவரது முகம் இருக்கமாகவே இருந்தது. அங்குத் திருமணத்திற்காக டிஜே இசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உரத்த சத்தத்தில் பாடல்களை இசைக்கத் தொடங்கியதால் மணமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

இதனால் பாடல்களை நிறுத்துமாறு அவர் பல முறை சொல்லியுள்ளார். குறைந்தது சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் டிஜே இசைக்கு அங்குப் பலரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். இதனால் மணமகன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான், அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மேடையிலேயே சரிந்தார்.

இதையடுத்து பதறியடித்துக் கொண்டு அவரே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சில நிமிடங்களில் உற்சாகமாக இருந்த திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்டது.

Views: - 378

0

0