உதயமாகும் புதிய கூட்டணி? தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட் : உற்று நோக்கும் திராவிட கட்சிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 12:50 pm
ADmk BJP - Updatenews360
Quick Share

அண்மை நாட்களாக அதிமுக பாஜக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது. பாஜக நிர்வாகிகள் சிலர் அதிமுகவில் இணைந்ததே இதற்கு காரணமாக அமைந்தது.

இருந்த போதிலும், இரு கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என இரு கட்சி தலைவர்களும் பேசி வந்தனர். ஆனால் இதையெல்லாம் நேற்று பாஜக நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியது தவிடுபொடியாகிவிட்டது.

ஒரு வேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால், தேமுதிக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுவிட்டது. அமமுகவை அதிமுக சேர்த்துக்கொள்ளாது. அதேபோல் தேமுதிகவை அதிமுகவை சேர்த்துக்கொள்வது கடினம். ஓபிஎஸ் கதையும் அப்படித்தான். அப்படி இருக்க பாஜக பெரும்பாலும் மூன்றாவது கூட்டணி அமைக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றன.

Views: - 483

0

0