பெண்கள் கழிவறைக்குள் திருட்டுத்தனமாக வீடியோ: பிரபல திரையரங்கில் நடந்த கொடுமை: போலீசார் விசாரணை….!!

Author: Sudha
16 ஆகஸ்ட் 2024, 12:33 மணி
Quick Share

சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான காபி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் மொபைல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று போடப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பதிவில், “ஒரு பெண் கழிப்பறையில் சுமார் 2 மணி நேரம் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், கழிவறையில், குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசியைக் கண்டெடுத்தார். அது ஃப்ளைட் மோடில் இருந்தது, அதனால் சத்தம் வராது, மேலும் கேமரா மட்டும் வெளிப்படும் வகையில் துளை போடப்பட்ட டஸ்ட்பின் பையில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டது. அந்த போன் அங்கு பணிபுரியும் ஒருவருடையது என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் x பக்கத்தில் “பெங்களூருவில் உள்ள எங்கள் BEL ரோடு கடையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், இதுபோன்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அந்த நபரை உடனடியாக பணிநீக்கம் செய்து, எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் விரைவாகச் செயல்பட்டோம் என பதிவிட்டு இருந்தார்.

இந்த சம்பவத்தில் பணியாளர் மனோஜை கைது செய்த சதாசிவநகர் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 77 (ஒரு பெண்ணின் அந்தரங்க படங்களை பார்த்தல், கைப்பற்றுதல் மற்றும் பரப்புதல்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்று ஒரு சம்பவம் இப்பொழுது பெங்களூரில் பிரபலமான ஊர்வசி திரையரங்கில் நடந்துள்ளது.அங்கு படம் பார்க்க சென்ற பெண்மணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார் அப்போது பெண்கள் கழிவறையின் ஜன்னல் வழியாக ஒருவர் வீடியோ எடுப்பதை கவனித்துள்ளார். உடனே அந்த பெண் சத்தமிட்டு உள்ளார். வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 146

    0

    0