பக்தரை போல பரவசத்துடன் கோவிலுக்குள் நுழைந்த நபர்.. திருடனாக மாறிய ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2024, 5:52 pm
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி நகரில் உள்ள புக்ககால்வாவில் உள்ள கெங்கையம்மன் கோயிலுக்கு ஒருவர் வந்தார். யாருக்கு சந்தேகமும் இல்லாத வகையிப் சாதாரண பக்தர் போல் பக்தியுடன் அம்மனை தரிசித்தார்.
பின்னர் யாரும் வரவில்லை என்பதை உறுதி செய்து அம்மனின் கழுத்தில் இருந்த தங்க செயினை திருடி சென்றார்.
சிறுது நேரம் கழித்து அங்கு வந்த பூசாரி அம்மன் கழுத்தில் உள்ள செயினை காணாமல் போனதை கண்டு சி.சி.கேமிராவை ஆய்வு செய்தபோது பக்தியுடன் வந்த பக்தர் அம்மன் செயினை திருடி சென்றதை பார்த்து போலீசில் புகார் அளித்தார்.
அம்மன் தாலியை அலேக்காக திருடிய நபர்!#viralpost | #viralvideos | #viralreels | #viralshorts | #shortsviral | #trendingvideos | #viralnews | #viral | #video | #andrapradesh | #ammantemple | #temple | #CCTV | #THIEF pic.twitter.com/NeOwjCPo3G
— UpdateNews360Tamil (@updatenewstamil) August 10, 2024
போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
0
0