சளி, இருமல் மட்டுல்ல.. ‘இது’ இருந்தாலும் உங்களுக்கு கொரோனா…? அதிர்ச்சி தகவல்…!

26 March 2020, 4:51 pm
Quick Share

டெல்லி: இருமல், காய்ச்சல் மட்டுமின்றி கண்கள் சிவந்திருந்தாலும் அது கொரோனா அறிகுறி என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை தந்திருக்கிறது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்தை எட்டி உள்ளது.

இந்நிலையில், காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை கொரோனா அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இப்போது அதில் மேலும் ஒரு தகவல் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது இனி உங்கள் கண்கள் சிவந்திருந்தாலும் அது கொரோனா அறிகுறி தான் என்று அமெரிக்காவில் உள்ள American Academy of Ophthalmology என்ற ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 கண்கள் சிவந்து, அழுக்குகள் வெளியேறி, வெண்படலம் படர்ந்த அறிகுறிகளுடன் 3% மக்கள் கொரோனாவால் தாக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அதன் பிறகே இந்த அறிகுறி அறியப்பட்டதாக அந்த நிறுவனம் கூறி இருக்கிறது. ள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். எனவே கண்களையும் கவனித்து கொள்ள வேண்டிய கடமை தற்போது மக்களுக்கு உருவாகியுள்ளது.

Leave a Reply