சென்னை ஐஐடியில் 61 வது பட்டமளிப்பு விழா ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப நிபுணர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் மொத்தம் 2,236 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. 444 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் அப்போது தங்கப்பதக்கம் வென்ற மாணவன் தனஜெய் பாலகிருஷ்ணன், மேடையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாணவன் தனஜெய் பாலகிருஷ்ணன் பேசுகையில், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போரை நடத்தக்கூடிய நாடுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமும் உதவி செய்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், இது போன்ற செயலுக்கு நமது அறிவு பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அறிவியல் பின்புலத்தில் இருக்கும் மாணவர்களாகிய நாம், கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது தொழில்நுட்ப அறிவை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை விழிப்புடன் பார்க்க வேண்டிய நிலை தற்போது உள்ளது என்று ஐஐடி மாணவர் தனஜெய் பாலகிருஷ்ணன் போருக்கு எதிராக தனது உரையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னதாக நாடாளுமன்றத்தில் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி பதவியேற்கையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியது அப்போது பெரும் சர்ச்சையானது.
பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகரில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெறும் போரில் காசா நகரில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக காசாவை சேர்ந்த 60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.