தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும் பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில் ஒரு ரூபாயும் நீல நிற பாக்கெட்டில் 1.50 ரூபாயும் குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை பால் அட்டை பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பால் விலை குறைப்பால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் திணறுகிறது.
தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகள் கூடுதல் கொள்முதல் விலையை எதிர்பார்க்கின்றனர்.
ஆவின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. இது 500 மி.லி. 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த பால் விற்பனை அதிகரிப்பதன் வாயிலாக ஆவின் நஷ்டத்தை வெகுவாக குறைக்க முடியும்.
எனவே ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் தயாரிப்பு 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக ஆரஞ்ச் நிற பால் அட்டை விற்பனையை தவிர்த்து சிவப்பு நிற பால் அட்டையை அதிகளவில் பொது மக்களுக்கு வினியோகம் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அக்., 15ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஆவின் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியும் கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுவாக நீல நிற பாக்கெட்டில் 3% கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துக்கள் உள்ளன, பச்சை நிற பால் பாக்கெட்டில் 4.5% கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துகள் உள்ளன.
ஆரஞ்சு நிற பாக்கெட்டில் 6% கொழுப்பு சத்தும், 9% இதர சத்துக்களும் உள்ளன. ஆவின் நிறுவனம் வாயிலாக ஒரு லிட்டர் பசும் பால், 32 ரூபாய்க்கும், எருமை பால் 41 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் இருந்து கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் பிரித்து எடுக்கப்பட்டு, வெண்ணெய், நெய், பால் பவுடர் தயாரிக்கப்படுகின்றன. நீலம் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில், அதிகளவில் சத்துக்கள் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. கொள்முதல் இழப்பு, சத்துக்கள் அதிகளவில் பிரிக்காதது, உற்பத்தி செலவு, வாகன வாடகை உள்ளிட்டவை காரணமாக, ஆரஞ்ச் பால் விற்பனையால், ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
அதேநேரத்தில், சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை வாயிலாக, லிட்டருக்கு எட்டு முதல் 10 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. எனவே, ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து, சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆரஞ்ச் பாலுக்கு தனி நுகர்வோர் உள்ளனர். இவர்களை சிவப்பு நிற பால் பாக்கெட்டை வாங்கவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.