18+க்கு கொரோனா தடுப்பூசி… 24ம் தேதி முதல் முன்பதிவு : ஆன்லைன்/ஆரோக்ய சேது செயலியில் எப்படி விண்ணப்பிப்பது..?

22 April 2021, 4:33 pm
corona vaccine - updatenews360
Quick Share

சென்னை : 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு வரும் 24ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,30,965 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2,104 ஆக அதிகரித்துள்ளது.

Corona_Vaccine_UpdateNews360

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடும் மோசமாக உள்ளது. இந்த சூழலில், கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில், 13 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பம் உள்ள 18 வயதை கடந்தவர்கள், (CoWIN) கோவின் வலைதளம் அல்லது ஆரோக்ய சேது செயலி மூலம் வரும் ஏப்.,24ம் தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி..?

முதலில் coWIN வலைதளத்திற்கு சென்று பதிவுசெய்க / உள்நுழைக என்பதைக் கிளிக் செய்யவும்

அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து, கிடைக்கப்பெறும் ஓடிபி.,யை (OTP) உள்ளீடு செய்து சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

தடுப்பூசிக்கான பதிவு பக்கத்தில், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து, பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

பின்னர், எப்போது தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்ற விருப்பத்தை கொடுக்க வேண்டும். பிறகு உங்கள் பகுதி பின்கோடை தேடலை அழுத்தவும். உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின விபரம் காண்பிக்கப்படும். அதில், தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு மொபைல் எண் பதிவு மூலமாக நான்கு பேர் வரை சேர்த்து ஒன்றாக பதிவு செய்யலாம்.

ஆரோக்ய சேது செயலியின் மூலம் பதிவு செய்வது எப்படி..?

ஆரோக்ய சேது செயலின் முகப்புத் திரையில் கோவின் என்னும் பகுதியை க்ளிக் செய்யவும்

அதில் தடுப்பூசி பதிவு என்பதை கிளிக் செய்து, மொபைல் எண்ணை பதிவு செய்து கிடைக்கப்பெறும், ஓடிபி.,யை உள்ளீடு செய்து க்ளிக் செய்யவும்.

தடுப்பூசி பதிவு பக்கம் ஓபன் ஆனதும் மேலே கூறிய கோவின் வலைதளத்தில் பதிவு செய்யக்கூடிய செயல்முறையை பின்பற்றி தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யவும்

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டால், 28 நாட்கள் முதுல் 42 நாட்களுக்குள் 2வது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால், முதல் டோஸ் போட்டதில் இருந்து 28 நாட்கள் முதல் 56 நாட்களுக்குள் 2வது டோஸ் போட வேண்டும்.

Views: - 162

0

0