அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்காக இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு : அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 4:49 pm
EPS ops - Updatenews360
Quick Share

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு பழைய தேர்தல் தொடர்பான சட்ட விதிகளும் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சட்டபோராட்டம் நடத்திய நிலையில், இறுதியாக உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை திட்டமிட்டது. இது தொடர்பாக ஆலோசிக்க கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது தேர்தலை 3 மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. இதன் முதல் கட்டமாக அதிமுக தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்க ஏற்பாடு நடைபெற்றது.

பழைய உறுப்பினர் அடையாள அட்டையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தோடு கையெழுத்தும் இருந்தது.

இதனையடுத்து ஓபிஎஸ் புகைப்படத்தையும், கையெழுத்தையும் நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி கையெழுத்தோடு புதிய அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியது.

இதனை முன்னால் அமைச்சர் வளர்மதி முதல் அட்டையை பெற்றுக்கொண்டார்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

அதிமுகவில் அடுத்தடுத்து மாற்றங்களை ஈபிஎஸ் புயல் வேகத்தில் நிகழ்த்தி வருவதால் ஓபிஎஸ்க்கு பேரிடியாக அமைந்துள்ளது.

Views: - 319

0

0