ஏப்ரலில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினிகாந்த் ; சகோதரர் சத்யநாராயணராவ் வெளியிட்ட தகவல்!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 3:48 pm
Quick Share

ரஜினி ஷூட்டிங் முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார் என்றும், இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது எனவும் ரஜனிகாந்த் அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் “தலைவர் ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை” நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணராவ், துவங்கி வைத்தார். இதில் மாரிதாஸ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ரஜனிகாந்த் அண்ணன் சத்யநாராயணராவ் பேசியதாவது ;- ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த அறக்கட்டளையை ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சந்தானம் ஆரம்பித்து உள்ளார். இந்த புனிதமான ட்ரஸ்ட் இன்றைக்கு நல்ல எண்ணத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்ய திறக்கப்பட்டு உள்ளது என்றும், ரஜினி ஆசீர்வாதத்தில் இவை நடைபெற்று உள்ளது, என்றார்.
.
மேலும் ரஜினி ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு ரசிகர்களை சந்திப்பார் என்றும், இந்த சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அமைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார். தொடர்ந்து, ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, இது இறைவனிடம் தான் உள்ளது என்று பதில் அளித்தார். மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ரஜினி ஷூட்டிங்கில் பங்கேற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல் ரஜினிகாந்த் ஆளுநரை, அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் சந்தித்தார் என்று ரஜினியின் சகோதரர் தெரிவித்தார்.

Views: - 179

0

0