கைதாகிறாரா நடிகர் ஆர்யா…? சென்னை மாநகர காவல் ஆணையருடன் திடீர் சந்திப்பு

Author: Babu Lakshmanan
2 September 2021, 6:20 pm
actor arya - updatenews360
Quick Share

ஜெர்மனி பெண் அளித்த மோசடி புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா சென்னை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி புகார் தொடர்பாக நடிகர் ஆர்யா மீது ஜெர்மணி பெண் போலீஸில் புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் நடிகர் ஆர்யாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர், ஆர்யாவுக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை என போலீசார் கூறி வந்தனர்.

ஆனால், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதனிடையே, நடிகர் ஆர்யாவை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கோரிக்கை விடுத்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஆர்யா, ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து பேசினார்.

Views: - 368

0

0