நடிகர்களை கூத்தாடி என அழைக்கலாமா…? ஒன்றிய சர்ச்சையில் நடிகர் கார்த்தி.. பிரபல நடிகை பளார் கேள்வி…!!!

7 July 2021, 1:14 pm
karthi -gayathri rahuram - updatenews360
Quick Share

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த நடிகர் கார்த்திக்கிற்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்களும் இவ்வாறே அழைத்து வருகின்றனர். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது தமிழகத்தில் பெரும் விவாதப் பொருளாகிவிட்டது. இதனிடையே, ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர் கார்த்தி நேற்று நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டு பேசினார். அவரது இந்தப் பேச்சிற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் நடிகர் கார்த்திக்கு சில கேள்வியை முன்வைத்து டுவிட் போட்டுள்ளார். அதில், “நடிகர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களை கூத்தாடி என்று அழைத்தால் அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான். நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? அவரைப் போன்ற நன்கு படித்த மனிதனுக்கு புரிதல் மிகக் குறைவு shame,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், நடிகர் திமுகவின் கொத்தடிமை என்பதை நிரூபித்து விட்டார் என்று அவர் பேசிய வீடியோவை பதிவிட்டு, நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, நீட் தேர்வு தொடர்பாக நடிகர் கார்த்தியின் சகோதரர் நடிகர் சூர்யாவிற்கு, விவாதம் நடத்திக் கொள்ளத் தயாரா..? என்று பாஜக சவால் விடுத்திருந்தது. குறிப்பிடத்தக்கது.

Views: - 264

2

0