கொரோனாவுக்கு அடுத்தடுத்து பலியாகும் திரை பிரபலங்கள்: காலா பட நடிகர் மரணம்..!!

17 May 2021, 10:03 am
nithish veera - updatenews360
Quick Share

சென்னை: அசுரன், காலா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர்.

“உன் பையன பத்தி உனக்கு சரியா தெரியாது நாளைக்கு சரியா புதைச்சு இருக்காங்களான்னு குழிய தோண்டி பார்ப்பான்” என்று புதுபேட்டையில் மணி என்கிற கதாபாத்திரம் பேசிய இந்த வசனம் மிக பிரபலம். புதுப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அதன் பிறகு வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் நிதிஷ். வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு பின் காலா, அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில் அசுரன் படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்ற வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு வயது 48 ஆகும்.

இந்நிலையில் பிரபல நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் பிரிந்தது. புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் மற்றும் காலா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றதன் மூலம் விமல் மற்றும் விஜய் சேதுபதிக்கு மிக நெருங்கிய நண்பர். இவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகாலையில் தான் இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா இன்று கொரோனாவால் பலியானது கூடுதல் தகவல்.

Views: - 132

0

0