மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை: 234 தொகுதிகளில் ரத யாத்திரை?….

30 November 2020, 10:15 am
Quick Share

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும், நடிகர் ரஜினி அரசியல் கட்சி துவக்க மாட்டார் என சமூக வலைதளங்களில், அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினி, ‘அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை’ என ஒப்புக் கொண்டார்.

இதனைதொடர்ந்து, சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து, 234 சட்டசபை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதா என்பது குறித்தும், தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், தேர்தல் பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சியை எவ்வாறு மக்களிடம் முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0