நடிகர் ரஜினியை சசிகலா திடீரென சந்திக்கக் காரணம் என்ன..? வெளியான தகவலால் தினகரன் அப்செட்…!!

Author: Babu Lakshmanan
11 December 2021, 4:51 pm
sasikala- rajini meet - updatenews360
Quick Share

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் ரஜினி, சசிகலா சந்திப்பு எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்த பிறகு, சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, முதலில் அரசியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் மெல்ல மெல்ல கால் பதித்த அவர், அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். ஆனால், அவரது ஆசை எதுவும் கைகூடியது போல தெரிய வில்லை. எனவே, அடுத்தடுத்து என்ன பண்ணலாம் என்று அவர் தீவிர திட்டம் போட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த்தை சசிகலா திடீரென சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி முழுக்க முழுக்க திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ரஜினியை மீண்டும் அரசியலுக்கு இழுக்கத் திட்டமா..? அல்லது அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுகவுக்கு நடிகர் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்த இந்த சந்திப்பா…? என்றெல்லாம் பல யூகங்கள் பறந்தன. இருப்பினும், இந்த சந்திப்பு எதற்காக என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை சசிகலா திடீரென்று சந்தித்தற்கான காரணம் என்ன..? என்பது பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.

annatthe -Updatenews360

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் செம ஹிட்டானது. வசூலில் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸை போன்றே, தங்களின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுக்குமாறு, நடிகர் ரஜினிகாந்திடம் சசிகலா கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே அவரை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

sasikala - dinakaran - updatenews360

அரசியலை இனி நம்பினால் வேலைக்காகாது என்பதை உணர்ந்த சசிகலா, இனி வியாபாரத்தை கவனிக்கலாம் என்று முடிவெடுத்த சசிகலா, அது தொடர்பான பணிகளில் ஆர்வம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். சசிகலாவின் இந்த திடீர் முடிவால், அமமுகவின் நிலை என்ன என்பதை நினைத்து டிடிவி தினகரன் புலம்பி வருகிறாராம்.

Views: - 385

0

0