தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு ரோஜா மாலையுடன் வந்த நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு தொண்டர்கள் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக நேற்று மதியம் அவரது உடல் வைக்கப்பட்டது.
இரவு முழுவதும் விடிய விடிய விஜயகாந்தின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சாரைசாரையாக படையெடுத்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால், அங்கு கூட்ட நெரிசல் அலைமோதியது. எனவே, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக இன்று அதிகாலை தீவுத்திடலில் விஜயகாந்தின் இன்று கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையே, விஜயகாந்த்தின் உடல் இன்று மாலை 4.45 மணியளவில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக, பிற்பகல் 1 மணிக்கு தீவுத்திடலில் இருந்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கி கோயம்பேடு வந்தடைய இருக்கிறது.
விஜயகாந்தின் உடலுக்கு நடிகர்கள் ரமேஷ் கண்ணா, எம்எஸ் பாஸ்கர், சுந்தர்.சி மற்றும் நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். ரோஜா மாலையுடன் வந்த அவர், விஜயகாந்த்தின் முகத்தை பார்த்து பார்த்து கண்கலங்கி போனார். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- விஜயகாந்தின் நட்புக்கு நண்பர்கள் அடிமை. விஜயகாந்த் நட்புக்கு இலக்கணமானவர்; விஜயகாந்தின் நட்புக்கு நண்பர்கள் அடிமை. கேப்டன் என்பது விஜயகாந்திற்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் மற்றவர் மீது கோபப்படுவார். ஆனால், அவர் மீது யாருக்கும் கோபம் இருக்காது. அவரது கோபத்தில் நியாயம் இருக்கும், எனக் கூறினார்.
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
This website uses cookies.