நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் : வசமாக சிக்கிய நபர்… விசாரணையில் திடுக் தகவல்…!!

Author: Babu Lakshmanan
16 October 2021, 6:01 pm
sarath kumar - updatenews360
Quick Share

சென்னை : நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு மூலம் மிரட்டல் வந்தது. அதன் பேரில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு செல்போன் எண்ணை ஆராய்ந்து பார்த்தனர். மோப்ப நாய் உதவியோடு வந்த போலீசார், சரத்குமாரின் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

அழைப்பு வந்த செல்போன் எண் விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியை சேர்ந்த மணிபாலன் என்பவருடையது என தெரியவந்ததின் பேரில், நீலாங்கரை உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் சென்று விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் (20), என்ற நபர் தான் செல்போனை எடுத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் உறவினர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர்.

இவர் முன்னாள் முதலமைச்சர்கள், நடிகர் விஜய், அஜித், தற்போதைய முதல்வர் என முக்கிய பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Views: - 244

0

0