நடிகர் சிம்புவின் கார் ஏறி முதியவர் பலி…சிக்கியது CCTV ஆதாரம்… சிக்கலில் டிஆர் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
24 March 2022, 10:36 am
Quick Share

சென்னை : மாற்றுத்திறனாளி ஒருவர் மீது கார் ஏற்றியதால் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் சிம்புவுக்கு நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 18-ந்தேதி தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், சாலையில் அமர்ந்தபடி மெல்ல மெல்ல சாலையை கடக்க முயன்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று முதியவர் மீது ஏறி, இறங்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஆனால், அந்த கார் நிற்காமலேயே சென்று விட்டது.

இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 481

0

0