விஜய், தனுஷை தொடர்ந்து வரிவிலக்கு கோரிய சூர்யா : சென்னை உயர்நீதிமன்றம் வைத்த ‘குட்டு’!!

Author: Babu Lakshmanan
17 August 2021, 6:20 pm
surya- updatenews360
Quick Share

சென்னை : திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வரிவிலக்கு கோரி வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் ஆகியோர் தாங்கள் இறக்குமதி செய்த சொகுசு கார்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் அறிவுரை கூறியதுடன், அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் போது, 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வருமான வரி நிர்ணயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பாயம் முடிவு செய்ததால், அதற்கான வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அப்போது, வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியன் சூர்யா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Views: - 235

0

0