நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடுக் தகவல் : தனித்தீவில் அடிக்கடி விருந்து… சிக்கும் மேலும் ஒரு நடிகை..!

21 September 2020, 6:29 pm
Sushant_Singh_Rajput_Updatenews360
Quick Share

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது அடுக்குமாடி குடியிருப்பில், தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது இறப்பிற்கு சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்திக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், போதைப் பொருள் புழக்கத்தில் அவருக்கும், அவரது சகோதரர் உள்பட 3 பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது.

பின்னர், அவர்களிடம் போதைப் பொருள் தடுப்பி பிரிவினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆரம்பத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதில்லை என வாக்குமூலம் அளித்த ரியா, பிறகு ஒரு முறை மட்டும் பயன்படுத்தியதாக தெரிவித்திருந்தார். இதனால், அவரிடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கில் மற்றொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பவானா அணைக்கு அருகில் உள்ள தீவில் நடிகர் சுஷாந்த் சிங் அவரது நண்பர்களுடன் அடிக்கடி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக மோட்டார் படகு ஓட்டும் படகு வீரர் ஜெகதீஷ் கோபிநாத் தாஸ் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது, பவானா அணைக்கு பலமுறை நண்பர்களுடன் சுஷாந்த் சிங் வந்துள்ளதாகவும், அப்போது, படகில் சவாரி செய்வதுடன், அணையில் நீச்சல் அடித்து பொழுதையும் கழித்து வந்ததாகக் கூறியுள்ளார். அவ்வப்போது, ரியா சக்ரபோர்த்தி, சாரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோரும் தனித்தீவுக்கு சென்று வந்தது அம்பலமாகியுள்ளது. அவர்களில் ரியா மட்டும் சுஷாந்துடன் அதிக நேரம் தனித்தீவில் பொழுதை கழிப்பார் என்றும், ஷ்ரத்தா நடிகருடன் ஒரு முறை மட்டுமே அந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படி தனித்தீவிற்கு வரும் போது அவர்கள் ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் படகு வீரர் ஜெகதீஷ் கோபிநாத் தாஸ் கூறியிருப்பது இந்த வழக்கை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.