நடிகர் விஜய்க்கு அபராதம் விதிங்க… அதோட அதையும் சேத்து பண்ணுங்க : புள்ளி விபரங்களோடு தளபதிக்கு தமிழக அரசு வைத்த செக்..!!!

Author: Babu Lakshmanan
14 March 2022, 6:54 pm
vijay - car 1- updatenews360
Quick Share

சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில் அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரு.63 லட்சம் மதிப்புள்ள சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், விஜய் தரப்பில் 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. ஆனால், வரி செலுத்தாமல் இருந்த காலத்தைக் கணக்கிட்டு ரூ.30 லட்சத்து, 23 ஆயிரத்து 609 செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, 2008ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021ம் ஆண்டு தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல, வரி செலுத்தாத காலகட்டத்தில் மாதத்திற்கு 2 சதவீதம் எனக் கணக்கிட்டு அபராதம் விதிக்கப்பட வேண்டிய நிலையில், தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு பதிலளித்து தமிழக அரசு முன் வைத்த வாதமானது :- நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்த பிறகும் வரி செலுத்தப்படவில்லை. 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30,23,609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.சட்டத்தில் அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக நடிகர் விஜய் கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் விஜய் தொடர்ந்த இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Views: - 337

0

0