விஜயின் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றியது இதற்காகத்தான் : நடிகர் விஜயின் தந்தை விளக்கம்..!!

5 November 2020, 6:52 pm
vijay and his father - updatenews360
Quick Share

சென்னை : விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றியது குறித்து நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவலை அவரது மக்கள் தொடர்பு அதிகாரி டுவிட்டரில் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்னும் பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தது உண்மைதான் என நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது முழுக்க முழுக்க தன்னுடைய முயற்சி என்றும், இதற்கும், விஜய்க்கும் தொடர்பில்லை என அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “1993ம் ஆண்டு விஜயின் முதல் ரசிகனாக ரசிகர் மன்றத்தை தொடங்கினேன். பிறகு 5 ஆண்டுகள் கழித்து அதனை நற்பணி மன்றமாக மாற்றினேன். இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் இயக்கமாக மாற்றினேன். இத்தனை ஆண்டுகளாக அந்தப் பெயரில் மாவட்ட வாரியான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அரசியல் கட்சியாக பதிவு செய்தேன். இதற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதால், அரசியல் போட்டியிடப் போவதில்லை. விஜயுடைய பி.ஆர்.ஓ. இந்த நடவடிக்கைக்கு மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால், இது என்னுடைய தனிப்பட்ட முடிவு,” எனக் கூறினார்.

Views: - 24

0

0