ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது : புதிய அரசுக்கு விஜய்சேதுபதி, வெற்றிமாறனால் நெருக்கடியா?

7 May 2021, 11:30 am
Cine letter to CM - updatenews360
Quick Share

அண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மையும் கிடைத்தது.

இந்த நிலையில் தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு, நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றி மாறன், பாடகர் டி. கிருஷ்ணா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம், சுப.உதயகுமார் உள்ளிட்ட 67 பேர் கையெழுத்திட்டு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

vijay sethupathi - vettrimaran - updatenews360

அதில் சுற்றுச்சூழல் தொடர்பான தங்களின் 14 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

அந்த கடிதத்தில், “மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க உங்கள் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். குறிப்பாக, கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்துமாறு உங்களை வலியுறுத்த விரும்புகிறோம்.

  • தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது. அந்த கம்பெனி மற்றும் அதன் இயக்குனர்கள் மீது அவர்களின் சுற்றுசூழல் குற்றங்களுக்கு குற்றவியல் வழக்குகள் தொடரப்படவேண்டும்.
  • சுற்றுச்சூழலை சீரழிக்கும் சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம், சித்தூர்-தச்சூர் 6-வழி சாலை திட்டம் மற்றும் கூடன்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் கூடுதலான 4-வது அணு உலையை நிறுத்தவேண்டும்.
  • மரபணு மாற்று விதைகளை அனுமதிக்க வேண்டாம்.
  • நிலத்தடி நீரின் வணிகரீதியான பயன்பாட்டை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உள்ளடக்கிய விரிவான நிலத்தடி நீர் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
  • டெல்டாவில் ஹைட்ரோகார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதிமொழியை வலிமைப்படுத்துதல், அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல், சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

*புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கும் மற்றும் உள்ளூர் பகுதிகளின் காற்று, நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தும் புதிய நிலக்கரி, அனல் மின் திட்டங்களை கைவிட்டு மாநிலத்தின் ஆற்றல் தேவைகளுக்கு பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை பின் தொடர வேண்டும்.

*உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பங்கேற்பதை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கடிதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக மாநிலத்தில் புதிய அரசு அமையும்போது ஒருவர், முதல்வராக பதவி ஏற்ற பின்புதான் இதுபோன்ற கோரிக்கைகளை அவருக்கு சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விண்ணப்ப கடிதமாக எழுதுவது வழக்கம். அல்லது நேரில் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவாக கொடுப்பார்கள்.

MK_Stalin_UpdateNews360

ஆனால் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பாகவே அவருக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் அவசரக் கடிதமாக அது எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கடிதத்தில் புதிய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான பல கோரிக்கைகளும் அடங்கியிருக்கின்றன.

மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால் எங்களது ஸ்டெர்லைட் ஆலை மூலம் அவசர தேவைக்காக ஆயிரம் டன் மருத்துவ ஆக்சிஜனை தயாரித்துக் கொடுக்க எங்களை அனுமதிக்கவேண்டும் என்று வேதாந்தா குழுமம் கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை உரிய முறையில் பரிசீலிக்கும்படி தமிழக அரசை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 26-ந் தேதி அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி எம்பி கனிமொழியும் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை தக்க கண்கணிப்புடன்
4 மாதங்களுக்கு தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

sterlite - updatenews360

இந்த முடிவு சுப்ரீம் கோர்ட்டுக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பை தொடங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கிவிடும் என்று எதிர் பார்க்கப்படும் நிலையில்தான் நடிகர் விஜய் சேதுபதியும், இயக்குனர் வெற்றிமாறனும் தமிழக அரசுக்கு இந்த அவசர கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தபடி மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை இயக்க முடியாமல் போனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய மிகப்பெரிய நெருக்கடி திமுக அரசுக்கு ஏற்படும்.

இதேபோல் இன்னொரு சிக்கலும் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் அனுப்பிய கடிதத்தில் காணப்படுகிறது.

Kudankulam_Nuclear_Plant_UpdateNews360

கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டின் உதவியுடன் கூடுதலாக அமைக்கப்படவுள்ள 4-வது அணு உலை திட்டத்தை கைவிட வேண்டும், புதிதாக அனல் மின் நிலையங்கள் எதையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தின் அன்றாட மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் தினமும் 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதனால் அன்றாடம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் 4-வது அணு உலையை கூடன்குளத்தில் திட்டமிட்டபடி 2024-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாமல் போனால் 2025-ல் தமிழகம் கடுமையான மின் வெட்டை சந்திக்கும் அபாய நிலைக்கு தள்ளப்படலாம் என்பது கசப்பான உண்மை.

கூடன்குளத்தில் 4-வது அணு உலையே தேவையில்லை என்றால் தற்போது இயக்கத்தில் இருக்கும் முதல் இரண்டு அணு உலைகளும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வர இருக்கும் மூன்றாவது அணு உலையும் சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்காதா?… இவற்றையும் முடக்கி விடலாமே?… என்று சமூக ஊடகங்களில் விஜய் சேதுபதியிடமும், வெற்றி மாறனிடமும் பலர் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.

Views: - 166

0

0