‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், இதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்காக இத்தனை நாட்கள் காத்திருந்த நடிகர் விஜய், இன்று ‘தமிழக வெற்றிக் கழகம்’ எனும் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துள்ள அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு என்று கூறியுள்ளார். மேலும், படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு முழுமையாக மக்கள் சேவையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்வாக சீர்கேடு, ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் நிலவுவதாகவும், மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பது தான் இலக்கு என்றும் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல, அது எனது ஆழமான வேட்கை என்றும், அரசியலின் உயரம் மட்டும் அல்ல, அதன் நீள அகலத்தையும் தெரிந்து கொள்ள பலரிடம் இருந்து பாடம் படித்து தயார்படுத்திக் கொண்டதாகக் கூறிய அவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கை பற்று உடையதாக கட்சி இருக்கும், என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் எனப் பெயர் வைக்க காரணம் என்ன என்றும், கட்சி தொடர்பான அறிவிப்பை பிப்ரவரி 2ம் தேதி அவர் வெளியிட்டதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயரில் உள்ள ‘வெற்றி’ என்ற வார்த்தை நடிகர் விஜய்யை குறிக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. திராவிட சித்தாத்தங்களை பின் தொடர விரும்புவதால் கழகம் என்று கட்சி பெயரில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தை சுருக்கமாக TVK என அழைக்கவும் விஜய் தரப்பு முடிவு செய்துள்ளனர்.
அதேபோல, நடிகர் விஜய் ஜாதகத்தின்படியே, கட்சி பெயர் மற்றும் அறிவிப்பு நாளை முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.