நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா..? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய ஆய்வுக்குழு அறிக்கை..!!
Author: Babu Lakshmanan22 October 2021, 1:38 pm
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று மத்திய ஆய்வு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் போது, கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயம் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களும் அச்சம் நிலவி வந்தது. மேலும், தமிழக அரசின் சார்பிலும் பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இந்த சூழலில், நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வருமான விவேக், சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், மறுநாளே அவர் உயிரிழந்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் நடிகர் விவேக் உயிரிழந்ததாக வதந்திகள் பரவின.
இந்த நிலையில், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரு நாட்களுக்கு பிறகு 2021 ஏப்ரல் 17-ல் விவேக் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில், நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் காரணமில்லை என்றும், உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0