2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம் : நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் கூடியது!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 3:38 pm
Actors Association -Updatenews360
Quick Share

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் 66 வது பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் விஷால், கார்த்தி, பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2 வருடத்திற்கு பிறகு கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பால்கே விருது பெற்ற ரஜினி, பத்மஸ்ரீ விருது பெற்ற சௌவுகார் ஜானகி ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்தும், நடிகர் சங்க கட்டடம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Views: - 727

0

0