தமிழகம் மீது தீவிரம் காட்டும் பாஜக: பிரபலங்களை களமிறக்க புதிய திட்டம்…!!

2 March 2021, 12:42 pm
bjp campaign - updatenews360
Quick Share

சென்னை: நடிகை ஹேமமாலினி தமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து 4 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய நடிகர்- நடிகைகளை களம் இறக்க பாரதிய ஜனதா மேலிடம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தின் போது இந்தி நடிகர் சோனிசூட் பலருக்கு உதவி செய்து பிரபலமானார். அவர் மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அனில் கபூர், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கான் ஆகியோர் மற்ற மாநிலங்களில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள்.

மேலும், சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் இவர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த இந்தி நடிகை ஹேமமாலினி தற்போது பா.ஜனதா எம்.பி.யாக உள்ளார். இவர் தமிழகத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

4 நாட்கள் தமிழகத்தில் தங்கி பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார் ஹேமமாலினி. தேர்தல் கூட்டங்களில் தமிழிலேயே பேசி பிரசாரம் செய்ய ஹேமமாலினி முடிவு செய்துள்ளார்.

Views: - 29

0

0