மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு பயணித்த கார் விபத்து…!!

18 November 2020, 10:34 am
Kushbu_UpdateNews360
Quick Share

சென்னை: மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த குஷ்பு வேல் யாத்திரைக்காக தன்னுடைய காரில் கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியது.

இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும், குஷ்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து குஷ்பு கூறியதாவது, கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.