நடிகை சமந்தாவுக்கு என்ன ஆச்சு..? திடீரென மருத்துவமனையில் அனுமதி… திரையுலகினரிடையே அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
24 November 2022, 9:16 am
Quick Share

நடிகை சமந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா திரையுலகில் குறுகிய ஆண்டுகளிலேயே தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை சமந்தா. அழகிலும், நடிப்பிலும் ரசிகர்களால் கவரப்பட்ட அவர், நாக சைதன்யாவுடனான விவகாரத்திற்கு பிறகு, திரையுலகில் மவுசு கூடியது.

Samantha Cry - Updatenews360

சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். மேலும், கடைசியாக அவர் நடித்துள்ள யசோதா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது, தான் பாதிக்கப்பட்ட நோய் குறித்து உருக்கமாக பேசினார்.

அதில் பேசிய அவர், “மயோசிடிஸ் நோய் எனும் தசைத் தளர்வு நோயை எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடி வருகிறேன். இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில தினங்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறேன், ஆனாலும் எதிர்த்துப் போராடுவேன்,” எனக் கூறினார்.

samantha - updatenews360-1

இந்நிலையில், நடிகை சமந்தாவுக்கு மீண்டும் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. மருத்துவமனை தரப்பில் இருந்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் இடையே மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 47

0

0

Leave a Reply