உதவுங்கள் மோடி… ஒவ்வொரு முறையும் அவமானப்படுகிறேன் : மாற்றுத்திறனாளி நடிகை சுதா சந்திரன் வேதனை..!!! (வீடியோ)
Author: Babu Lakshmanan22 October 2021, 4:55 pm
வெளிநாடுகளுக்கு செல்வதற்காக விமான நிலையம் செல்லும் போது, ஒவ்வொரு முறையும் மன வேதனையடைவதாக பிரபல நடிகை சுதா சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது :- பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட முறையில் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் ஒரு நடிகையும், நடன கலைஞராகவும் இருந்து வருகிறேன். செயற்கைக் காலை கொண்டு நடனமாடி, நமது நாட்டிற்கு நான் பெருமை சேர்த்துள்ளேன்.
ஒவ்வொரு முறையும் நான் எனது பணி நிமிர்த்தமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, விமான நிலையத்திற்கு செல்லுகையில், பாதுகாப்பு சோதனைகளுக்காக எனது செயற்கை காலை விமான நிலைய அதிகாரிகள் அகற்றுகின்றனர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களை எளிதில் கடந்து செல்ல தேவையான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். நான் உண்மையான இந்தியக் குடிமகள். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படுவேன். பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைகளை கடந்து செல்வது வேதனையளிக்கிறது. எனது கோரிக்கை உடனே நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0