அதிமுக 49வது ஆண்டுவிழா கொண்டாட்டம் : வரலாறு படைப்போம்.. வாகை சூடுவோம் – ஓபிஎஸ் சூளுரை..!!

17 October 2020, 4:55 pm
OPS - admk - updatenews360
Quick Share

அதிமுகவின் 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, வரலாறு படைப்போம், வாகை சூடுவோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார்.

அதிமுகவின் 49வது ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,”அதிமுக 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக பொன்விழா ஆண்டிலும் அம்மாவின் அரசாட்சியே தொடர்ந்தது என்ற வரலாற்றை படைப்போம், வாகை சூடுவோம்,” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply