தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

7 March 2021, 3:08 pm
amit shah - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்து வரும் சட்டப்பேரவை தேர்தலை பாஜக சந்திக்க இருக்கிறது. அந்தக் கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக அதிமுக தலைமையிடம் கொடுத்துள்ளது. இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதியாகவில்லை.

இந்த நிலையில், பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தார். அங்கு அவருக்கு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், சுசீந்திரம் பகுதியில் ‘‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- சுசீந்திரத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று பாஜகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளோம். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றி உறுதி செய்யுமானு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும், எனக் கூறினார். மத்திய அமைச்சரின் வருகையையொட்டி குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Views: - 9

0

0