அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு : பாஜகவிற்கு இத்தனை தொகுதிகளா…? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

1 March 2021, 12:27 pm
amit shah - ops -eps - meet - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அமித்ஷாவுடன் அதிமுக தலைமை நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை வைத்து பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு, செய்து பேச்சுவார்த்தையை சுமூகமாக முடித்தது அதிமுக. இதைத் தொடர்ந்து, ஏனைய கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, பாஜகவுக்கு ஒதுக்கப்படும்‌ தொகுதிகளின்‌ எண்ணிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பா.ஜ.க. தரப்பில் 30 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகவும், ஆனால் 20 தொகுதிகளி வரை ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அவர்கள் கேட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 40

0

0