எதிர்கட்சி தலைவர் குறித்து தீவிர ஆலோசனையில் அதிமுக : டுவிட்டரில் டிரெண்டிங்கில் #எடப்பாடியார்..!!!

7 May 2021, 7:35 pm
eps - - updatenewsw360
Quick Share

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், முக ஸ்டாலின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், ராயப்பேட்டையில் நடந்த அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனையின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை எதிர்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டுவிட்டரில் அதிமுகவினர் அவரது பெயரை குறிப்பிடும் விதமாக, எடப்பாடியார் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 294

2

0