அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் அதிரடி உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பும் எழுத்தப்பூர்வ விளக்கத்தையும் தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், தன்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதற்கு எதிராகவும் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதியாகும். மேலும், ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகும். அவ்வாறான தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசம் செல்வது உறுதியாகிவிடும்.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக தலைமை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.