ஜுலை 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என அறிவிப்பு

5 July 2021, 7:51 pm
EPS OPS - Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 9ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட இருக்கிற. எனவே, அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Views: - 147

0

0