தேமுதிகவை சரிகட்டும் அதிமுக : தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை!!

2 March 2021, 2:19 pm
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிக மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து சுமூகமாக கூட்டணியை உறுதி செய்து விட்டது.

இதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பாஜகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 2வது கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால், ஜெயலலிதா இருந்த போது ஒதுக்கீடு செய்யப்பட்ட 41 தொகுதிகளை இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த அதிமுக, அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது.

vijayakanth-updatenews360

“விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்,” என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பகீரங்கமாக கூறினார்.

இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு திடீரென அமைச்சர்கள் தங்கமணி, எஸ்பி வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து பேசினர். அப்போது, பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது போன்று, தேமுதிக 20 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், விஜயகாந்த் பிரச்சாரத்திற்கு வந்தால் 14 தொகுதிகள், இல்லையென்றால் 10 தொகுதிகள் மட்டும்தான் கொடுக்கப்படும் என்ற கறாராக கூறி விட்டனர். உங்கள் முடிவை விரைவில் சொல்லுங்கள் என சொல்லி விட்டு திரும்பினர்.

இதையடுத்து, அமைச்சர் தங்கமணியை தேமுதிக நிர்வாகிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிமுக தரப்பில் 14 தொகுதிகள் வரை மட்டுமே வழங்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை தேமுதிக வெளியேற இருப்பதாகவும், தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதீஷிடம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். இதையடுத்து, இரு தரப்பினரிடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

Views: - 91

0

0