அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு : பிரச்சாரக் குழு, பணிக் குழுக்களையும் அமைத்து இபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி..!!

13 November 2020, 11:50 am
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைத்து அதிமுக தலைமை அதிரடி காட்டியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, எதிர்கட்சியான திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிக்குழுவை அமைத்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்களை அமைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடி காட்டியுள்ளனர்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாட்சி ஜெயராமன், செம்மலை, சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன், ஜே.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா, அன்வர் ராஜா, டாக்டர் வேணுகோபால் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சார குழுவில், தம்பிதுரை, வைகைச்செல்வன், பு.தா.இளங்கோவன் ஆகியோரும், ஊடகம் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கும் குழுவில் தங்கமணி, ஜெயக்குமார், காமராஜ், ஆர்பி உதயகுமார், மாஃபா பாண்டியராஜன், வைகைச் செல்வன், விபிபி பரமசிவம் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் குழுவில், சி. பொன்னையன், பொள்ளாச்சி வி ஜெயராமன், டி ஜெயக்குமார், செம்மலை, சி. விஜயபாஸ்கர், வைகைச்செல்வன், ஏ.டபூள்யூ. ரபி பெர்னார்ட், மருது அழகுராஜ், ஆர்.எம். பாபு முருகவேல் ஆகியோரும், ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக ஏ.டபுள்யூ. ரபி பெர்னார்ட், மருது அழகுராஜும், இணை ஒருங்கிணைப்பாளர்களாக அஸ்பர் கே. சுவாமிநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 34

0

0

1 thought on “அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு : பிரச்சாரக் குழு, பணிக் குழுக்களையும் அமைத்து இபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி..!!

Comments are closed.