அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்…! தனியார் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

14 February 2020, 8:30 pm
Quick Share

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. ராஜேந்திர பிரசாத் காலமானார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம்  அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கே.பி. ராஜேந்திர பிரசாத். மேல்புறம் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்த அவரை குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக்கினார் ஜெயலலிதா.

பின்னர் 2001ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, ஜெயலலிதா அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரானார்.

ஓராண்டுக்கு பிறகு, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.2006 மற்றும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

 இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கட்டி நோய் காரணமாக கடந்த 26ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது சிகிச்சை பலனின்றி கே.பி. ராஜேந்திர பிரசாத் இன்று காலமானார். அவருக்கு அல்போன்சா என்ற மனைவியும், தினேஷ் குமார் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர்.

Leave a Reply