சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்மற்றும் சிவகாசி நகரங்களில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டங்களில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது :-அதிமுக உறுப்பினர் அடையாள அட்டையை ஒவ்வொருவருக்கும் முறையாக வழங்க வேண்டும்.
நிர்வாகிகள் யாரும் உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை மொத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாது.
அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகளை அணுகி நடவடிக்கை எடுத்தால், நம்மைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் பொது மக்களிடையே ஏற்பட்டு, மக்களுக்கு தேவையான உதவிகளை நாம் செய்தால் மக்கள் நம்மளை ஏற்றுக் கொண்டு ,நமக்கு ஜாதகமாக இருப்பார்கள். மக்களின் கவனம் நம் பக்கம் திரும்பும். உழைக்காமல் இருந்தால் யாரும் எந்த பதவிக்கும் வர முடியாது .
அதிமுகவில் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி இலக்கை நோக்கியே நம் பயணம் இருக்க வேண்டும். நாம் வெற்றி பெறும் காலத்தை நெருங்கி விட்டோம்.
சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நிச்சயிக்கப்பட்ட வெற்றியாக இருக்க வேண்டும். அதிமுகவின் ஒவ்வொருவரும் உறுப்பினராக, நிர்வாகியாக இருப்பதில் பெருமை கொண்டு உழைக்க வேண்டும்.
திருத்தங்கலில் சாதாரண அடித்தட்டிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த என்னை சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக ஆக்கியது அதிமுக தான். எனக் கென்று பின்பலம் ஏதும் கிடையாது. 2026- சட்டமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல்.
அதிமுகவை அழிக்க எந்த அரசியல் கட்சிக்கும் தகுதி கிடையாது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். எனவே நாம் அனைவரும் இணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றினால் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
திமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அனைத்து வரியினங்களும், எல்லா விலைவாசிகளும் கூடிவிட்டன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றியடையாவிட்டாலும், நாம் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்துள்ளோம்.
திமுக ஆட்சியில் அரிசி, பருப்பை பதுக்கி வெளிநாடுகளுக்கு கடத்துகின்றனர்.திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி அதிமுக ஆட்சி தான். அனைத்து பகுதிகளிலும் அதிமுகவுக்கு ஓட்டு வாங்க அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்து அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதிமுக அம்பானி- அதானிக்கான இயக்கமல்ல. ஏழை- எளிய -நலிந்த மக்களை பாதிக்காத ஆட்சி அதிமுக ஆட்சி.எனவே வரும் தேர்தலில் வெற்றி பெற நமது களப்பணி நல்ல முறையில் இருக்க வேண்டும்.
நம்முடைய வீச்சும் சரி! பேச்சும் சரி! சரியாக இருக்க வேண்டும். திமுக நமக்கு எதிரி கட்சியல்ல, உதிரி கட்சி. அதிமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் யாருக்கும் பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு துணை யாக இருக்கிறோம். என்றார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.