வரும் ஜன.,9ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் : தலைமைக் கழகம் அறிவிப்பு

21 December 2020, 3:49 pm
OPS EPS- updatenews360
Quick Share

சென்னை : வரும் ஜனவரி 9ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடட்ம் வரும் ஜனவரி 9-ம் தேதி சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0