கட்சியின் விதிகளை மீறிய அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

Author: Babu Lakshmanan
19 March 2021, 1:54 pm
thoppu venkadachalam 1- updatenews360
Quick Share

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் பெருந்துரை தொகுதி எம்எல்ஏவான தோப்பு வெங்கடாச்சலத்திற்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க அதிமுக மறுத்து விட்டது. இதனால், அதிருப்தியடைந்த அவர், அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம் செய்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கழகத்தின்‌ கொள்கை-குறிக்கோள்களுக்கும்‌ கோட்பாடுகளுக்கும்‌ முரணான வகையில்‌ செயல்பட்டதாலும்‌, கழகத்தின்‌ கண்ணியத்திற்கு மாசு ஏற்படும்‌ வகையில்‌ நடந்து கொண்டதாலும்‌, கழகக்‌ கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும்‌ அவப்‌ பெயரும்‌ உண்டாகும்‌ விதத்தில்‌, பெருந்துறை சட்டமன்றத்‌ தொகுதியில்‌ போட்டியிடும்‌ கழக வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல்‌ செய்துள்ள காரணத்தாலும்‌, ஈரோடு புறநகர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த தோப்பு என்‌.டி. வெங்கடாச்சலம்‌, (கழக புரட்சித்‌ தலைவி பேரவை இணைச்‌ செயலாளர்‌) இன்று முதல்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்‌ பொறுப்பு உட்பட அனைத்துப்‌பொறுப்புகளில்‌ இருந்தும்‌ நீக்கி வைக்கப்படுகிறார்‌. கழக உடன்பிறப்புகள்‌ யாரும்‌ இவருடன்‌ எவ்விதத்‌ தொடர்பும்‌ வைத்துக்கொள்ளக்‌ கூடாது எனக்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 88

0

0