இருமொழிக் கொள்கையில் உறுதி : அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

28 September 2020, 11:07 am
Quick Share

சென்னை : தமிழகத்தில் இருமொழிக் கொள்கை முறையில் அரசு உறுதி என்பது உள்பட 15 தீர்மானங்கள் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் கட்சியான அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை அவைத் தலைவர் மதுசூதனன் முன்மொழிய, செயற்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-

கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சரை பாராட்டி தீர்மானம்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி தீர்மானம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தடுத்து நிறுத்தியதாகக் கூறி தீர்மானம்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அறிவித்த தமிழக அரசுக்கு அதிமுக செயற்குழுவில் பாராட்டு

அதிமுக அரசு தொடர அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என தீர்மானம்

ரூ.14,000 கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்ற கருத்தில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கும்.

11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்ற தமிழக அரசுக்கு நன்றி

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Views: - 7

0

0