மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா : மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..!
27 August 2020, 2:17 pmQuick Share
நாகை : தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சாதரண மக்களை மட்டுமல்லாமல் மக்களின் பிரதிநிதிகளையும் விடாமல் துரத்தி வருகிறது. இதுவரையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என 20க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த சீர்காழி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முதலமைச்சரின் வருகையொட்டி நடத்தப்பட்ட பரிசோதனையில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.