அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்கட்சி தலைவர் அவசர ஆலோசனை… சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த திடீர் கூட்டம்..!!

Author: Babu Lakshmanan
23 August 2021, 10:40 am
eps 1-updatenews360
Quick Share

சென்னை : அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், கோடநாடு பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வபெருந்தகை கவன ஈர்ப்பு தீர்மான மனு கொடுத்துள்ளார். மேலும், இந்த தீர்மானத்தின் மீது இன்றே விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், கலைவாணர் அரங்கில் எதிர்கட்சி தலைவர் அறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

ஏற்கனவே, கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னுடைய பெயரை சேர்க்க சதி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வரும் நிலையில், கவன ஈர்ப்பு மனு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

Views: - 564

0

0