கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக கொடியை பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று ஒ.பன்னீர்செல்வத்தை அதிமுக ராஜன் செல்லப்பா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பரகுன்றத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் உள்ளிட்ட 60 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது;- தேர்தல் ஆணையத்தால் ஒரு சிறப்பான தீர்ப்பை எடப்பாடியார் கழகத்திற்கும், கழகத் தொண்டர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். சட்ட ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புள்ளிவிபரத்துடன் பேசினார். அதற்குரிய பதிலை முதலமைச்சர் சட்டமன்றத்தில் தரவில்லை. மாறாக, எங்கள் மீது பழி போடும் வகையில் தான் முதலமைச்சர் பேசினார்.
குறிப்பாக கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிக்கு திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் கொடுத்தனர். இதுகுறித்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் முதலமைச்சர் எடுக்கவில்லை. கோடநாடு வழக்கில் 90 சதவீதம் விசாரணை செய்து முடியும் தருவாயில் இப்பொழுது வேண்டுமென்றே, சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டு காலநீடிப்பு செய்தது யார்?
இது குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடியார் கேள்வி எழுப்பும்போது, ஒளிபரப்பை காண்பிக்க மறுத்து விட்டார்கள். அதனால்தான் வெளிநடப்பு செய்தோம், எனக் கூறினார்.
ஒ.பி.எஸ் கட்சி கொடி பயன்படுத்துவது குறித்து பேசியதாவது :- பன்னீர்செல்வம் நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்தி விட்டது. ஆனால் வேண்டுமென்றே பன்னீர்செல்வம் சின்னத்தையும், கொடியையும் பயன்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும். அவர் மாநாட்டை ரத்து செய்ய வேண்டும். அப்பாவி தொண்டர்கள் ஓபிஎஸ்சால் பழியாக கூடாது.
இன்றைக்கு 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிக்கப்படும். எந்த திட்டமும் மக்கள் நலம் சார்ந்து அறிவிக்கப்படவில்லை, என தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் 12 மணிநேர வேலை சட்டம் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது :- தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலை என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருப்பது தொழிலாளருக்கு விரோதமானதாகும். இதனை கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆதரிப்பது தொழிலாளருக்கு செயல், என்றார்.
கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மனோஜ் சையான் அதிமுக தலைமையால் தாக்கப்படுவதால் திமுக ஆதரவு அளித்தது கேள்விக்கு,
அந்த வழக்கு விசாரணையில் உள்ளது . திமுகவினர்தான் ஜாமின் அளித்தனர். மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கான இடத்தை ஆய்வு செய்து வருகிறோம். இந்த மாநாடு என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக அமையும்.
கழக பொதுச்செயளாலர் எடப்பாடியார் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வருகிறார். அவருக்கு மிகப்பெரிய எழுச்சிமிகு வரவேற்பை மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அளிக்கப்படுகிறது, என்று கூறினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.